×

நடிகை சுஜா காதல் திருமணம்

சென்னை: நடிகை சுஜா, நடிகர் சிவகுமார் காதல் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. குசேலன், ஜெயம் கொண்டான், தெனாவட்டு, கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், தோழா, ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி.  சிங்கக்குட்டி, புதுமைகள் தேவை, இதுவும் கடந்துபோகும் படங்களில்  நடித்தவர் சிவாஜிதேவ் என்கிற சிவகுமார். இவர்கள் இருவரும் கடந்த சில  வருடங்களாக காதலித்து வந்தனர். குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று திருமணம்  நடந்தது.

சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுஜா-சிவகுமார் திருமணம் வைதீக முறைப்படி நடந்தது. திருமண விழாவில் இயக்குனர்கள்  எஸ்.பி.முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகர்கள் சிவகுமார், அஸ்வின், கணேஷ்  வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் லதா, ராதிகா,  லிசி, வடிவுக்கரசி,  விஜிசந்திரசேகர், ‘காதல்’ சந்தியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை  வாழ்த்தினார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suja , Actress Suja, love, marriage
× RELATED குமரி கார் டிரைவர் சவுதியில்...